செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

இனவாதத்தைக் கொண்டு இனி அரசியல் செய்ய முடியாது – மன்னாரில் பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்.

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது – மன்னாரில் பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார் .

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

மன்னார் எழுத்தூர் பகுதியில் நேற்றைய தினம் (10) வியாழன் மாலை தேசிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இன்று நாட்டிலே பாரிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சியதிகாரம் தம்மை உயர்ந்த வர்க்கம் என்று கூறிக் கொள்பவர்கள் இடம் தான் இருந்தது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மூவின மக்களும் இணைந்து சாதாரண மக்களிடம் இந்த ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஒரு விவசாயியின் மகன் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச உட்பட தனிப்பட்ட ரீதியாக எந்த அரசியல்வாதிகள் மீதும் எங்களுக்கு கோபம் கிடையாது..

Related posts

இலங்கையில் எவரும் எந்த பகுதியிலும் வாழலாம்: வடக்கு ஆளுநர்

wpengine

இவருடைய தற்கொலைக்கு ப்ளுவேல் காரணமாக இருக்கலாம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor