பிரதான செய்திகள்

இனங்களுக்கு இடையில் பாலத்தை கட்டுவதற்கு பதிலாக பிரித்து வைக்கும் நிலை

அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரமான அடிப்படைவாதிகளிடம் இருந்து இதனை விட பெரிதாக எதனையும் தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்துள்ளார்.


முஸ்லிமாக பிறந்தது தகுதியற்றது என்றால், அது குறித்து தாம் பெருமைப்படுவதாகவும் அனைத்து சர்வாதிகாரங்களையும் தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அலி சப்றி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,
அடிப்படைவாதிகள் ஒருவரை ஒருவர் போஷித்து வருகின்றனர். 70 ஆண்டுகளாக நடந்தது போல் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது.


இனங்களுக்கு இடையில் பாலத்தை கட்டுவதற்கு பதிலாக மதில் சுவர்களை எழுப்பி மனிதர்களை பிரித்து வைக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலே எந்த கட்சி சம்பந்தமும் இல்லாத இந்த இனவாதிகளிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கான இழப்பீடாக 15 கோடி ரூபாயை செலுத்துமாறு கோரி மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தரப்பினரால், அலி சப்றியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து நீக்குமாறு கோரி இணையத்தளம் வழியாக மகஜர் ஒன்றிலும் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.


சட்டத்தரணி அலி சப்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடி வந்ததுடன் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஜனாதிபதி என்பதால், அவருக்கு எதிராக வழக்குகளை நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்றத்தில் தடையுத்தரவையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மதம் மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள் சுந்திர நிகழ்வில்

wpengine

வவுனியா சாளம்பகுளம் பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த டெனீஸ்வரன்

wpengine

இலங்கை மீதான வட கொரியாவின் இணையதள தாக்குதல்

wpengine