கட்டுரைகள்பிரதான செய்திகள்

இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி

இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு இன ரீதி­யாக தனி­யான கட்­சிகள் அவ­சி­ய­மில்லை. அவ்­வா­றான கட்­சி­களின் தோற்­றத்­தி­னால்தான் இன்று முஸ்­லிம்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இந்த நாட்­டி­லுள்ள அனைத்து சமூ­கத்­தி­னரும் தத்­த­மது இனத்தை மையப்­ப­டுத்­திய கோசத்­தினைக் கைவிட்டு விட்டு நாம் இந்த நாட்டின் தேசிய பிரஜை என்ற கோதாவில் குரல் எழுப்­பு­கின்­ற­போது எமது நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு இனத்­த­வ­ருக்கும் கிடைக்க வேண்­டிய அனைத்து விட­யங்­களும் மிக எளிதாய்க் கிடைத்து விடும் என அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி தெரி­வித்தார்.

அறிஞர் சித்­தி­லெவ்வை ஆராய்ச்சி மையத்­தினால் ஏற்­பாடு செய்­ய­ப்பட்ட அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் சம்­பந்த­மான விஷேட கலந்­து­ரை­யாடல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை(29) அக்­க­ரைப்­பற்று ரீ.எப்.சி.ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஆய்வு மையத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் தொடந்தும் அவர் உரை­யாற்­று­கையில், இந்த நாட்டில் எமக்கு வேண்­டி­யதைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் பிரிந்து நின்று பேசு­வதில் நாம் பூரண பயன்­பாட்­டினை பெற்­று­விட முடி­யாது. நாம் அனை­வரும் இந்­நாட்டின் பிரஜை என்ற அடிப்­ப­டையில் செயற்­பட்டு குரல் கொடுக்­கின்­ற­போது எமக்கு கிடைக்க வேண்­டிய அனைத்தும் உரிய முறையில் வந்து சேரும்.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் இன்­று­ வரை நம் நாட்­டி­லுள்ள மூவின சமூ­கத்­த­வர்­களும் நமது இனம் இனம் என்­றுதான் பேசி­யி­ருக்­கின்­றோமே தவிர நாட்டின் உறு­தி­யான பிரஜை என்று பேச­வில்லை.

தற்­போது அது­பற்றிப் பேச ­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. மூவி­னத்­த­வர்­களும் இலங்கைப் பிரஜை என்ற அடிப்­ப­டையில் ஒன்­று­ப­டலாம். அவ்­வாறு ஒன்­று­பட்டு எமது கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­படு­கின்­ற­போது நமக்­கான அனைத்து விட­யங்­க­ளையும் இல­குவில் பெற்றுக் கொள்ள முடியும். ஆளுக்­கொரு கட்சி வைத்­துக்­கொண்டு பேசு­வ­தெல்லாம் எதிர்­கா­லத்­திற்குப் பொருந்­தாது.

அனை­வரும் நாட்டின் பிரஜை என்று ஒரு­மித்துக் குரல் கொடுப்­போ­மே­யானால் எம்­மத்­தியில் ஒற்­றுமை மிளிர்­வ­துடன் நமக்கு வேண்­டி­ய­வை­யி­னையும் இல­குவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நாட்­டி­லுள்ள முஸ்­லிம்கள் நாம் முஸ்­லிம்கள் என்று பிரித்துப் பிரித்து பேசு­வதால் எமக்­கான தேசி­யமே கேள்­விக்­கு­றி­யாகி காணப்­ப­டு­கின்­றது. முஸ்­லிம்கள் குறிப்­பாக மற்ற சமூ­கத்­தினை இணைக்­கின்ற பால­மாக செயற்­பட வேண்­டி­ய­வர்கள்.

இந்த நாட்­டி­லுள்ள மூவின சமூ­கங்­க­ளையும் இணைத்துச் செயற்­ப­டு­கின்­ற­போது பல்­வே­றான விட­யங்­களை நமது முஸ்­லிம்கள் இல­குவில் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனிக் கட்சி என்ற தேவை இல்லை.

கடந்த 1947ஆம் ஆண்டு முதல் இன்று வரை நமது முஸ்­லிம்கள் அனைத்து விட­யங்க­ளையும் பிரித்துப் பிரித்­துத்தான் பேசி வரு­கின்­றார்கள்.

தேசியம் என்ற பிரச்­சி­னையை விட்டு தேசிய விட­யங்­க­ளுக்­காக இந்த நாட்­டி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது உருக்­க­மான ஓர் உரையை ஆற்­றி­யி­ருக்­கின்­றார்­களா என்றால் விடை பூச்­சி­ய­மா­கவே அமையும். நமது முஸ்­லிம்கள் அவ்­வாறு தேசிய விட­யங்­க­ளுக்­காக இலங்கைப் பிரஜை என்ற அடிப்­ப­டையில் பேசி­யி­ருந்தால் நமது பக்கம் அனைத்துச் சமூ­கத்­தி­னரும் தலை சாய்த்­தி­ருப்­பார்கள்.

நமது முஸ்­லிம்கள் தேசத்தை இணைத்துப் பேச­வில்லை. அனைத்­தையும் நாம் பிரித்துப் பிரித்­துத்தான் பேசி வரு­கின்றோம். முஸ்­லிம்­க­ளுக்கு உரிமை இல்லை, தமி­ழர்­களால் எமக்கு ஆபத்து என்­றெல்லாம் பேசு­வ­தால்தான் எமக்கு ஆபத்து நேர்ந்­தது.

பிரித்துப் பிரித்துப் பேசு­வதால் எமக்­கான தேசியம் இழக்­கப்­ப­டு­கின்­றது. நாம் இந்த நாட்டின் முக்­கிய பிரஜைகள். திட­மான வர­லாற்­றினைக் கொண்­ட­வர்­க­ளாக நாம் இருக்­கின்றோம்.

நமது முஸ்­லிம்கள் இளம் சமு­தா­யத்­தி­னரை வைதீக அடிப்­ப­டையில் வளர்த்­துக்­கொண்டு வரு­கின்றோம். முஸ்­லிம்கள் சிந்­திக்கத் தொடங்­கி­ய­தா­லேயே முன்­னேற்­ற­ம­டைந்­தார்கள்.

தற்­போது நாம் சிந்­திக்­காமல் இருப்­ப­தால்தான் சில விட­யங்­க­ளை­க் ­கூடப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக உள்ளோம். நமது இளை­ஞர்கள் சுய­மாக சிந்­தித்து செயற்­படும் வகையில் வளர்த்­தெ­டுக்­கப்­பட வேண்டும்.

இந்த நாட்­டி­லுள்ள முஸ்­லிம்கள் எதைச் செய்ய வேண்­டு­மாக இருந்­தாலும் எமக்­கான தகவல்கள் தேவை­யாக உள்­ளன. எம்­மிடம் எந்தத் தக­வல்­களும் புள்­ளி­வி­பர அடிப்­ப­டையில் ஆவ­ண­மாக இல்லை.

இதனைத் தொகுக்கும் பணியில் யாருமே செயற்­ப­ட­வில்லை. முஸ்­லிம்கள் பற்­றிய புரா­ணங்­களும், இதி­கா­சங்­களும், கதை­களும் பல உள்­ளன.

அவை ஒன்றும் சட்­டத்தின் முன் ஆதா­ர­மாக முடி­யாது. நமது வர­லா­றுகள் உட­ன­டி­யாக ஆவ­ண­மாக்­கப்­பட வேண்டும். அது பக்கச் சார்­பற்ற விதத்தில் தொகுக்­கப்­ப­ட­ வேண்டும். அப்­போ­துதான் உறு­தி­யாக நம்­மைப் ­பற்றி பேச­மு­டியும்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மக்கள் தொகை அடிப்­ப­டையில் நமது முஸ்லிம் சமூ­கத்­தினர் 30 சத­வீ­தத்­தி­ன­ராக வாழ்­கின்­றனர். இந்த 30 சத­வீத முஸ்­லிம்கள் மூன்று சத­வீத நிலத்­தினைக் கொண்­ட­வர்­க­ளா­கவே உள்ளோம்.

இவ்­வி­ட­யத்­தினைப் பற்றி எந்­த­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது பாரா­ளு­மன்­றத்தில் பேசி­யி­ருக்­கின்­றார்­களா? இவ்­வா­றான விட­யத்­தினை தமி­ழர்கள் நன்­கு­ணர்ந்­தி­ருக்­கின்­றார்கள்.

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் அமரர் செல்­வ­நா­யகம் கேட்டு வந்­தி­ருக்­கின்றார். நமது முஸ்லிம் சமூ­கத்தின் முக்­கிய பிரச்­சி­னை­யாக நிலம் உள்­ளது.  மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தினைப் பொறுத்­த­மட்டில் 30 சத­வீ­த­மா­ன­வர்கள் மூன்று சத­வீத நிலத்தில் வாழ்ந்­தாலும் அதனை விஸ்­த­ரிக்­கா­விட்­டாலும் அதனை தொடர்ச்­சி­யாக காப்­பாற்­றக்­கூ­டிய மாற்று வழி­பற்றி நாம் ஏதா­வது நட­வ­டிக்கைள் மேற்­கொண்­டி­ருக்­கின்­றோமா? அர­சியல் சீர்­தி­ருத்த சட்­டங்கள் வரு­கின்­ற­போது எமக்­கான முக்­கிய பிரச்­சி­னை­களை எப்­படி முன்­வைக்­கலாம் என்று சிந்­தித்துச் செய­லாற்ற வேண்­டி­யுள்­ளது.

மர்ஹூம் சேர் ராசிக் பரீத் தேசியக் கட்­சியில் அங்கம் வகித்து கொண்டு, முஸ்லிம் சமூ­கத்­திற்­காக ஆற்­றிய சேவை­களை விட வேறு எந்த முஸ்லிம் அர­சியல் தலை­மையும் தனிக் கட்­சி­க­ளினால் எதையும் சாதித்து விட­வில்லை.

முஸ்­லிம்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்க போரா­டுவோம் என்று கூறு­கின்­றார்­களே.

அப்­படி இந்த நாட்டில் மாற்று இனங்கள் அனு­ப­வித்துக் கொண்டு, எமக்கு மறு­த­லிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற உரி­மைகள் எவை என்­பதை யாரா­வது பட்­டி­ய­லிட்டு சொல்ல முடி­யுமா? நிச்­ச­ய­மாக ஒன்றும் இல்லை. அவ­ரவர் அர­சி­ய­லுக்­கான கோஷங்­கள்தான் அவை என்­பதை மக்கள் புரிந்து கொள்ள தயா­ரில்லை. அதனால் இந்த இழி­நிலை தொடர்­கின்­றது.

இந்த நாட்டு முஸ்­லிம்கள் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். எதையும் நேர்­மை­யாக சிந்­திப்­ப­தற்கு தயா­ரில்லை. எமது பெறு­ம­தி­யான இளை­ஞர்கள் வைராக்­கி­ய­மிக்­க­வர்­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

எந்த விட­யத்தை எடுத்துக் கொண்­டாலும் பிரிந்து நின்று கோஷ­மி­டவே பழக்­கப்­பட்­டி­ருக்­கின்றோம்.

இவைதான் முஸ்லிம் கட்­சி­க­ளினால் எமது சமூ­கத்­திற்கு ஆற்­றப்­பட்­டுள்ள சாத­னை­க­ளாகும்.

இந்த நாட்டில் முஸ்­லிம்கள் பூர்­வீக குடி­மக்கள் என்­கின்றோம். நூற்­றாண்டு கால பழை­மையை சொல்­கின்றோம். ஆனால் அதற்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் உண்டா? எமது வர­லாறு எழு­தப்­பட்­டி­ருக்­கி­றதா? புராணக் கதைகள், சட்­டத்தின் முன் ஆதா­ர­மாக ஏற்றுக் கொள்­ளப்­படமாட்­டாது. எமது சமூகம், எமது பிர­தே­சங்கள் தொடர்பில் முக்­கிய விட­யங்கள் பற்­றிய புள்­ளி­ வி­ப­ரங்கள் எம்­மிடம் கிடை­யாது.

ஆவ­ணங்கள் இல்லை. அவற்றை சேக­ரிப்­ப­தற்­காக முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. ஆனால் கோஷம் மட்டும் எழுப்பிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

பிரச்­சி­னைகள் எழு­கின்­ற­போது நாம் இனத்தை முன்­னி­றுத்­து­கின்றோம். அது பிரச்­சி­னை­களை இன்னும் ஊதிப் பெருப்­பித்து பூதா­க­ர­மாக மாற்றி விடு­கின்­றன. நாமும் இந்த நாட்டு பிர­ஜைகள் என்றே எமது தேவை­களைக் கேட்க வேண்டும்.

எமது பிரச்­சினை­களை நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் அணு­கினால் நீதி­மன்றம் கூட எமக்கு சாத­க­மான தீர்­வு­களை பெற்­றுத்­தரும். அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் முஸ்­லிம்கள் அவ்­வா­றுதான் தமது பிரச்­ச­ினை­களை தீர்த்துக் கொள்­கின்­றனர்.

உணர்ச்­சி­க­ளுக்கு அடிமைப்பட்டு, மாற்று இனத்தவருடன் பகைமை பாராட்டுவதனால் நாம் எதனையும் சாதித்து விட முடியாது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், அதுவும் நாம் சிறுபான்மையினராக வாழ்கின்ற சூழ்நிலையில் அனைத்து விடயங்களிலும் மாற்று இனத்தவருடன் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே அவர்களது அரவணைப்பை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒரு நிலைமை தோன்றுமாயின் நமக்கு யார் அநியாயம் இழைக்கப்போகிறார்கள்?

சிந்திக்காமல் செயற்படுவதனால்தான் நாம் சாதாரண விடயங்களை கூட சாதித்துக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றோம். கசப்பாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் எம்மிடம் வர வேண்டும்.

இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஐம்பது இளைஞர்கள் முன்வருவார்கள் என்றால் அவர்களை வழி நடத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.

Related posts

தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி-சுசில் பிரமஜெயந்த

wpengine

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை!

Editor

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் எரிசக்தி அமைச்சர்

wpengine