உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின்  தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை  ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா அளித்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 

ஆசி­யாவின் மிகச்­சி­றந்த பசு பரா­ம­ரி ப்பு மையமான ‘ஹிங்­கோ­னியா’ ராஜஸ்­தானில் உள்­ளது. கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்­ந­லக்­கு­றைவு மற்றும் காயங்­களால் இந்த மையத்தில் உயி­ரி­ழந்­துள்­ளன என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளி­யிட்­டது. இது தொடர்­பான வழக்கு, நேற்­று­முன்­தினம்  ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு வந்­தது.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்­டனை விதிக்க வேண்டும்.  பசுவை தேசிய விலங்­காக அறி­விக்க வேண்டும் என மத்­திய மாநில அர­சு­க­ளுக்கு சில முக்­கிய அறி­வு­ரை­களை வழங்­கினார்.  பசுவை ஏன் தேசிய விலங்­காக அறி­விக்க வேண்டும் என செய்­தி­யா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளித்த நீதி­பதி, 33 கோடி கட­வுள்கள் பசு­வினுள் வசிக்­கி­றார்கள் என்று நம்­பப்­ப­டு­கி­றது. பசு ஒரு மருத்­து­வ­ம­னை­யையே தனக்குள் கொண்­டுள்­ளது. ஒட்சிசனை உட்­கொண்டு மீண்டும் ஒட்சிசனையே வெளி­யேற்­று­வது பசு மட்­டும்தான். கல்­லீரல், இதயம் உள்­ளிட்­ட­வற்றை கோமியம் பாது­காக்கும் கோமியம் குடிப்­பதால் பூர்வ ஜென்ம பாவங்­களிலிருந்து விடு­தலை கிடைக்கும். இத­னால்தான் பசுவை தேசிய விலங்­காக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

மேலும், மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை. ஆண் மயிலின் கண்­ணீரால் மட்­டுமே பெண் மயில் கரு­வு­று­கி­றது. எனவே மயில் புனி­தத்­தன்மை கொண்­டது. அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக உள்­ளது என்று கூறி அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்ளார்.

Related posts

ரணில் திருடன் தாக்குதல்! பாராளுமன்றம் ஒத்திவைப்பு

wpengine

அரச வெசாக் வைபவத்திற்காக 3420 லட்ச ரூபா செலவு!

wpengine

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine