பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு வருகைதந்த குடும்பம்

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு  வருகை தந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார். 

 

வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு  சென்றிருந்தார்.

கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வெள்ளிக்கிழமை தலைமன்னாரை வந்தடைந்த நிலையில் அவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவர்களை இன்று சனிக்கிழமை மதியம்  மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான்  கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர்  மாதம்  19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் விரைவில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம்

wpengine

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

wpengine

கரடியுடன் செல்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

wpengine