செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம், இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு . !

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையை என்பது அவசியமானது. இரு நாடுகளும் நாகரீக காலம் முதல் உறவுகளை கொண்டுள்ளன.  எமது இரு நாடுகளின் எதிர்காலம் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

இரு நாடுகளின் இணைப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் பகிரப்பட்ட இலக்குகளுடன் பயணிப்பது அவசியமாகும்.

இரு நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப மாற வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

இலங்கையின் சமகால அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில திட்டங்கள் வரவேற்கத்தக்கது.” என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? சமூகவலைத்தளம் பொய் சொல்லுகின்றது.

wpengine

உதயன் நாளிதழ் நடாத்திய சித்திரைப் புதுவருட விழா-2017 (படங்கள்)

wpengine

செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவுக்கு மாடு கடத்தல்! பொலிஸ் முறியடிப்பு

wpengine