செய்திகள்பிரதான செய்திகள்

இந்த வருடம் இதுவரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழப்பு .

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள், 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

103 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதிக்குள் 934 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

Editor

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor