பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளது.

2022 ஆம் அரை ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் அரையாண்டில் இந்த வருமானம் 93 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன்) மொத்த வரி வருவாயானது 696,940 மில்லியன் ரூபாய் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் வரி வருமான சேகரிப்பான 361,832 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் வரி வருமானமானது 696,940 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

Related posts

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு!

wpengine

கிளிநொச்சி, முல்லைத்தீவு வெள்ளம்! அமைச்சர் விஷேட கூட்டம்

wpengine

நான் குற்றமற்றவன்! ரவி கருணாநயக்க பதவி விலகல்

wpengine