பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டிய சதொச நிறுவனம் அமைச்சர் றிஷாட்

கடந்த புத்தாண்டு காலத்தை விடவும் இவ்வருட சித்திரைப் புத்தாண்டில் சதொச விற்பனை நிலையங்கள் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தாண்டு காலத்தில் பொருட்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலைகள் முடியுமான வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தினூடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த விசேட உணவுப் பொதியில் மொத்தமாக 1515 ரூபா பெறுமதியுள்ள உணவுப் பொதி, 975 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பால்மா, அரிசி, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் உட்பட பத்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இதில் அடங்கும் என்று சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் கடந்த 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு றிப்கான் பதியுதீன் கடிதம்!

wpengine

மன்னார் முசலி பிரதேச சபை உறுப்பினர் முஸ்லிம் ஒருவருடன் வாய்தர்க்கம் வீடியோ

wpengine

வடக்கு புதிய ஆளுனா் ரேஜிநோல்ட் குரே பம்பலப்பிடடி கோவிலில் ஆசி வேண்டி

wpengine