உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலியில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

மத்திய இத்தாலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிசாலையில் திரண்டனர்.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால்  ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. சாலைகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக முதற்கட்டம தகவல் வெளியானது.  இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related posts

தூர இடங்களில் இருந்து அவரை சந்திக்க சென்றவர்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள்

wpengine

சந்திரிக்கா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இரகசிய சந்திப்பு

wpengine

சமூகத்திற்காக பேசுகின்ற போது சிங்கள பேஸ்புக் பக்கத்தில் பிரபாகரனை போல் எனக்கு விமர்சனம்

wpengine