பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இடம்பெயர்ந்து வாழும் வன்னி மக்களுக்கான 10000ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை! மக்கள் விசனம்


புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10000 ரூபா உதவிக்கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்படவில்லை என்பதை கண்டித்து நேற்றைய முுன் தி ன ம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.


எருக்கலம்பிட்டி இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது 10000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு எமக்கு தகுதியில்லையா. அதிகாரிகளே இதனை கவனத்தில் எடுங்கள்’, ‘எங்களது உரிமை எங்களுக்கே’, ‘மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரே எங்களுக்கு உதவிடுங்கள்’ இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.


கொரோனா காரணமாக அரசாங்கத்தால் 5000 ரூபா உதவிக் கொடுப்பனவுகள் ஏனைய மக்களுக்கு இரண்டு தடவைகள் (10 ஆயிரம் ரூபா) வழங்கப்பட்டுள்ள போதிலும், தமக்கு குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.


மன்னாரில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டு புத்தளத்தில் வாழும் குடும்பங்களுக்கு குறித்த பணத் தொகையை மன்னாரிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் அவர்களுடைய கணக்கில் வைப்பிலிடுவதற்காக மன்னாரிலிருந்து அதிகாரிகள்; கடந்த மாதம் புத்தளத்திற்கு விஜயம் செய்து 5000 ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு 100 ரூபா பணம் அறிவிட்டு கணக்குகளையும் திறந்துவிட்டுச் சென்றுள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பிட்டனர்.


எனினும், இதுவரை குறித்த உதவித்தொகை தமது கணக்குகளில்; வைப்பிலிடப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட போது இதற்கு வழங்கப்படவென பணம் இதுவரையிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.


இதுதொடர்பில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபா உதவிக்தொகை 10000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்டம் 5000 ரூபா வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில், இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்டத்தை நிரந்தர வாக்காளர்களாக கொண்ட முஸ்லிம் மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகள் இதுவரையிலும் வழங்கப்படவில்லை. இதுபற்றி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் , முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாருக் மற்றும் வேட்பாளர் ஜஸார் உள்ளிட்டோர் இந்த மக்களுக்கு உடனடியாக 5000 ரூபா உதவித் தொகையை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் அவர்களுடைய அந்த கோரிக்கைகள் கிடப்பிலேயெ போடப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜை என்ற அடிப்படையில், அவர்களின் உரிமை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை இந்த நாட்டு அரசாங்கத்திற்கும், அரச அதிகாரிகளுக்கும் உள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய இறுதிகிரியைகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர், இந்த 5000 ரூபா உதவித் தொகை கொடுப்பனவு விடயத்திற்குப் பொறுப்பான பஷில் ராஜபக்சவை சந்தித் முன்னாள் பிரதி அமைசச்ர் காதர் மஸ்தான் அவர்கள் இந்த மக்களுக்கு 5000 ரூபா கொடு;ப்பனவுகள் வழங்கப்படவில்லை என்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.


ஆப்போது முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் எல்லோரும் ரிஷாத் பதியுதீனின் ஆதரவாளர்கள். ஆகவே அவர்களுக்கு அந்தக் கொடுப்பனவை வழங்க முடியாது என்று கருத்துப்பட சொல்லியிரு;ககிறார். புத்தளம் எருக்கலம்பிட்டியில் வாழும் மக்கள் ரிஷாத் பதியுதீனுடைய ஆதரவாளர்கள் அல்ல. இவர்கள் மர்ஹூம் நூர்தீன் மசூருடைய ஆதரவாளர்கள். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இன்னமும் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


எனவே, இந்த கொடுப்பனவு விடயத்தில் பாரபட்சம் பார்க்க வேண்டாம். அரசியல் பழிவாங்கல்களை செய்யக் கூடாது என்று அரசாங்கத்திற்கும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்துகிறோம் என்றார்.

Related posts

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!

Editor

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர்

wpengine

முசலிக்கான பொது விளையாட்டு மைதானம்! அரிப்பு கிராமத்தில் அமைக்க விளையாட்டு அதிகாரி,தொழில்நூற்ப அதிகாரி,சிலாவத்துறை கிராம உத்தியோகத்தர் சூழ்ச்சி

wpengine