பிரதான செய்திகள்

இடம்பெயர்ந்த மக்கள் இனியும் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்க முடியாது.

இத்தனை வருடங்கள் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரச சேவையும் பெற முடியாமலும் செய்து , அந்த மயில் தலைவரின் பதவி சுயநல நோக்கத்திற்காக அடமானம் செய்யப்பட்ட மக்களுக்கு முதலாவது நிரந்தரமான முடிவு கிடைத்தது. இத்தனை ஆண்டுகள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலே அவருக்கு வாக்குரிமை.

இப்போது அவர்கள் அகதிகள் அல்ல அவர்களும் அந்த மாவட்டத்தில் மக்களே!
அவர்களுக்கும் தற்போது சகல மாவட்ட உரித்தும் வந்துள்ளது.,)

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்களிக்க முடியாது. இனிமேல் இது சாத்தியப்படாத விடயமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தோ்தல் ஆணைக்குழுவில் ஊடகவியலாளா் சந்திப்பொன்றை நடாத்தி இதனை வெளியிட்டனர்.

புத்தளத்தில் வாழ்ந்துகொண்டு மன்னார் தேர்தல் டாப்பில் இருந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், அம் மக்களின் பெயர்கள் புத்தள இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்தில் வீடு, பாடசாலை, தண்ணீ, மிண்சாரம், வீட்டு வரி, பாதை என்பவற்றை உபயோகிப்பார்களேயானால் அந்தப் பிரதேசத்திலுள்ள உள்ளுராட்சி, மாகணசபை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே ஒருவர் வாக்களிக்க தகுதியானவர்களாகிறார்கள். இதற்க்கு அமைவாகா இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மன்னாரில் வாக்குப்பதிவு வேண்டும் என்போர் அல்லது மன்னாரில் வீடு உள்ளவர்கள் அங்கு சென்று வாழ்வதுடன் அங்குள்ள பதிவுகளில் இடம்பெறவும் முடியும் என்பதும் கூறப்பட்டுள்ளது…

Related posts

பசிலை கடுமையாக தீட்டிய மஹிந்த

wpengine

இரசாயன மூலப்பொருள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

Editor

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

Maash