பிரதான செய்திகள்

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய பதவிகளை ஏற்கத் தவறிய அதிகாரிகள் தொடர்பில் கடும் நடவடிக்கை

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய புதிய பதவிகளை ஏற்கத் தவறிய அதிகாரிகள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள அலுவலகங்களில் கடமையை ஏற்காத அதிகாரிகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெறவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

பொது நிருவாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் பலருக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

ஒரு வாரத்திற்குள் அவர்கள் புதிய கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளதாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

எனினும் ஒருசில அதிகாரிகள் இடமாற்ற உத்தரவை பொருட்படுத்தாது ஏற்கனவே கடமையாற்றிய இடங்களிலேயே இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள்

wpengine

மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி.

wpengine

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

wpengine