பிரதான செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 308 என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது.

லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க 62 ஓட்டங்களையும், குஷல் மென்டீஸ் 77 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன் மெத்தியூஸ் 67 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தார்.

இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி ஓவர்கள் 42 ஆக குறைக்கப்பட்டது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இலங்கை 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 308 என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலஞ்ச கிராம உத்தியோகஸ்தர் கைது

wpengine

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அதிதியாக முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

ஹக்கீமின் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.

wpengine