பிரதான செய்திகள்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில்!

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று(28) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(28) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்துவதற்காகவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூட்டப்படுவதாக குறிப்பிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நேற்று(27) அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Related posts

விக்னேஸ்வரன் உரை! வெளியேறிய வடமாகாண சபை உறுப்பினர்கள் (வீடியோ)

wpengine

பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்கவில்லையா? உடன் 118

wpengine

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஹாஜியார் உணவக மகன்

wpengine