பிரதான செய்திகள்

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

அரசாங்கம் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்து வெளியிடும் சுதந்திரம், அரசியல் செய்யும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை அரசாங்கம் மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி தற்பொழுது நாட்டின் ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றிலிருந்து மிகை வரி அறவீடு செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டமைக்கான பிரதான ஏது, ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Related posts

வாகன இலக்க தகடுகளில்! வாவொலி சமிக்கை

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கொழும்பில் கைது!

Editor

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

wpengine