பிரதான செய்திகள்

அவரது மறைவு சமுதாயத்துக்கு பேரிழப்பு அமைச்சர் றிஷாட் கவலை

(ஊடகப்பிரிவு)
மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ யின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பி.சி.தாஸிம் அவர்கள் கனடாவில் காலமான செய்தி வருத்தமளிக்கின்றது. அவரது மறைவு, சமுதாயத்துக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை வெளியிட்டுள்ளார்.

அனுதாப அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலாய் இனத்தைச் சேர்ந்த தாஸிம், தனது வாழ்வின் பெரும்பகுதியை சமூக சேவையிலேயே கழித்தவர். இலங்கையில் வை.எம்.எம்.ஏ என்ற நிறுவனம் பரந்துபட்ட சேவைகளை வழங்குவதற்கு மர்ஹூம் தாஸிமின் பங்களிப்பு அபரிமிதமானது.

மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வை.எம்.எம்.ஏ கட்டிடமும், அதனை அண்டிய வரவேற்பு மண்டபமும் எஸ்.பி.எஸ்.தாஸிமின் முயற்சியினாலாகும்.

முன்னாள் வங்கியாளரான தாஸிம், வெளிநாடுகள் பலவற்றில் தொழில் புரிந்தவர். மறைந்த தலைவர்களான எம்.எச்.முஹம்மத், ஏ.எச்.எம்.அஸ்வர், மசூர் மௌலான ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹூம் எஸ்.பி.சி.ஹலால்தீன், மர்ஹூம் தாஸிமின் சகோதரர் ஆவார்.
அன்னாரின் ஈடேற்றத்துக்காக பிரார்த்திப்போம்.

Related posts

“கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டும்

wpengine

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை குறித்து அமைச்சர் றிசாட் ஆராய்வு

wpengine

நிதி வேண்டி அலி தலைமையிலான குழு வொசிங்டன் நோக்கி பயணம்.

wpengine