பிரதான செய்திகள்விளையாட்டு

அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம்

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீமின் தலையை பதம் பார்த்ததில் மைதானத்திலிருந்து அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

 

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப் போட்டியின்  2 ஆவது இன்னிங்ஷில் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹீம் சௌத்தி வீசிய எகிறும் முறையான பந்தை எதிர்கொள்ள முயன்றபோதே பந்து அவரது தலையை பதம் பார்த்துள்ளது.

குறித்த பந்து முஷ்பிகுர் ரஹீமின் இடது காதின் பின் பக்கத்தை தாக்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக மைதானத்திற்குள் கீழே விழுந்த ரஹீம் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அருகிலிருந்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அவருக்கு உடனடியாக ஸ்கானிங் மற்றும் எக்ஸ்ரே பெறப்பட்டதையடுத்து எவ்வித ஆபத்துமில்லையென வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் வெளியேறினார்.

Related posts

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

wpengine

மன்னாரில் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கிய சஜித், முன்னால் அமைச்சர்

wpengine

கணவனின் காதல் லீலை! மனைவி தற்கொலை

wpengine