பிரதான செய்திகள்

அவசர நிதிகளை பெறுவதில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தடை

கொரோன வைரஸ் நிவாரணங்களுக்காக அவசர நிதிகளை பெறுவதில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி இந்த நிதிகளை பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து மாகாண ஆளுநர்கள் திறைசேரியிடம் இருந்து அவசர நிதிகளை திருப்பி செலுத்தும் உறுதியில் பெற்று அவற்றை உணவு விநியோகத்துக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்திய நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதேவேளை உள்ளூராட்சி மன்றங்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளை தமது உணவு விநியோகத்துக்காக பெற்றுக்கொள்ள முடியும் என்று செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

wpengine

மனோ – திகாவின் இழி அரசியல் புத்தி!

wpengine

புத்தர் சிலைகளை உடைப்பு! 9 முஸ்லிம்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine