பிரதான செய்திகள்

அளும் கட்சி இராஜங்க அமைச்சர்களுக்கிடையில் முரண்பாடு! உன்னை கடுமையாக தாக்குவேன்.

சக இராஜாங்க அமைச்சர் ஒருவரை மிகவும் கடுமையாக தொலைபேசி வாயிலாக மிரட்டிய சம்பவமொன்று தொடர்பான குரல்பதிவு ஊடங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொழுது பதவி விலகப் போவதாக கூறப்பட்டு வரும் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

“நீங்கள் போனை கட் பன்னினால் பரவாயில்லை, எனினும் எனது தொகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தகளைக் கொண்டு பாதைகளை அமைத்து எங்களது பாதைகளை நிறுத்தினால் நான் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து நிமால் லன்சா உன்னைத் தாக்குவேன்.

தவிடுபொடியாகும் வகையில் தாக்குவேன்.” என அமைச்சர் சனத் நிசாந்த கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் சனத் நிசாந்த பிரிதொரு நாளில் அமைச்சர் நிமால் லன்சாவிற்கு எதிராக ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா பொலிஸ் வளாகத்தில் 16பேருக்கு கொரோனா

wpengine

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

Maash

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine