பிரதான செய்திகள்

அலுவகத்தில் ஊழியர்கள் இருவருக்கு இடையில் மோதல், ஒருவர் மரணம்..!

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார்.

அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட இளைஞனின் சடலம் மொரொன்துடுவ கோனதுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொன்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முள்ளிக்குளம் பகுதியில் யானை தாக்குதல்! இடத்திலேயே பலி

wpengine

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும்! தொடர்ந்து ஆதரவு நவாஸ் ஷெரீப்

wpengine

அவசரமாக சிறுநீரகம் தேவை! உடனடியாக தொடர்பு கொள்ளவும்

wpengine