அரசியல்கிளிநொச்சிபிராந்திய செய்தி

அர்ச்சுனா ராமநாதன், யுவதி ஒருவரின் பெயர் மற்றும் விலாசத்தைக் கூறி, விபச்சாரம் செய்கிறார் என அபாண்டம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், யுவதி ஒருவரின் பெயர் மற்றும் விலாசத்தைக் கூறி, அவர் YouTube மற்றும் TikTok ஊடாக விபச்சாரம் செய்கிறார் என அபாண்டம் சுமத்தியதை எதிர்த்து, பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் எவரும் வாய் திறக்காமை ஏமாற்றமளிக்கிறது.

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து YouTube செய்யும் யுவதி ஒருவரின் பெயரைக் கூறி, அவர் விபச்சாரி என்று, நேற்றைய தினம் (11) தனது உரையில் அர்ச்சுனா ராமநாதன் கூறியிருந்தார்.

ஆனால், இது தொடர்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது கவலையான விடயமாகும். அதேபோன்று, எந்தவொரு பெண்கள் அமைப்பும் இது தொடர்பில் இதுவரை தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

விபச்சாரம் என்றால் என்ன?

உதாரணமாக, பெண்ணொருவர் ஆணொருவருடன் உடறுறவை வைத்துக்கொள்வதற்காக பணத்தையோ, அல்லது அன்பளிப்புகளையோ பெற்றுக் கொள்வதை விபச்சாரம் எனலாம். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட ஆணொருவரும் பெண்ணொருவரும் விரும்பி உடலுறவு வைத்துக் கொள்வது – இலங்கைச் சட்டப்படி குற்றமாகாது, அதை ‘விபச்சாரம்’ என்றும் கூற முடியாது.

ஒருவர் விபச்சாரம் செய்கிறார் என்பதை கையும் மெய்யுமாக நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் அதனை ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக ஒரு பெண் – பணத்தை அல்லது அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டு, ஆண் ஒருவருடன் உறவுறவில் ஈடுபடுவதை சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றில் பொலிஸார் நிரூபித்தால் மட்டுமே, குறித்த பெண்ணுக்கு விபச்சாரத்தில் ஈடுபட்டமைக்கான தண்டனை வழங்கப்படுவதற்கு சாத்தியமுள்ளது.

சட்டம் இப்படியிருக்க, தனது வாய்க்கு வந்தபடி, பெண் ஒருவரை விபச்சாரி என்று சொல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஒரு பெண் தனது YouTube பக்கத்தில் எல்லை மீறி பேசுகிறார் அல்லது நமது கலாசாரத்தை மீறிப் பேசுகிறார் என்பதற்காக, அவர் மீது விபச்சாரி என முத்திரை குத்துவது எந்த வகையில் நியாயமாகும்.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி, தனக்கு விருப்பமற்ற அல்லது தன்னுடன் முரண்பாடுள்ள பெண்களையும் விபச்சாரி என்று அர்ச்சுனா எம்.பி கூறினால், அதையும் கேட்டுக் கொண்டு, மௌனமாக கடந்து செல்லப் போகிறீர்களா? அப்படி அர்ச்சுனா அபாண்டம் சுமத்தும் நபர் – சிலவேளை நீங்களாகவோ அல்லது உங்கள் அன்புக்குரியவராவோ இருக்கக் கூடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெண், ஆணொருவருடன் படுக்கையில் இருக்கும் படமொன்றை அல்லது ஒரு வீடியோவை ஆதாரமாகக் காட்டிக் கூட, அந்தப் பெண்ணை விபச்சாரி என்று கூற முடியாது. அந்தப் பெண்ணை விபச்சாரி என்று குற்றம்சாட்டுவதென்றால், குறித்த ஆணுடன் உடலுறவு கொள்வதற்கு – சம்பந்தப்பட்ட பெண் அன்பளிப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டுச் சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

அனுராதபுரத்தில் வன்புணர்வுக்குள்ளான பெண் வைத்தியருக்கு சார்பாக பெண்கள் அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் ஆதரவாகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதைப் போன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் – விபச்சாரி பட்டம் சூட்டப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்புக்களும் திரண்டெழ வேண்டும். அதுதான் பாரபட்சமற்ற செயற்பாடாக அமையும்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா; மலையகத் தமிழர்களை கப்பலில் வந்த அடிமைகள் என்றார், முஸ்லிம்களை ஒன்பது தகப்பன்களுக்குப் பிறந்தவர் என்றார், சக நாடாளுமன்ற உறுப்பினர்களை மடையன், முட்டாள், பைத்தியக்காரன் என்கிறார். இதன் தொடர்ச்சியாக தனது சமூகத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரையே – விபச்சாரி என்று நாடாளுமன்றத்தில் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி – நமக்கிடையே முளைத்துள்ள ஒரு பீடை. அவர் ஒருவரைத் திட்டும் போது, அது சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அர்ச்சுனா செய்து கொண்டிருப்பது பேராபத்தான செயற்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்திலும் தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்து வரும் கருத்துக்கள், சிலவேளைகளில் இனங்களுக்கிடையில் பாரதூரமான மோதலை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது என்பதை, இப்போதே எச்சரிக்கையாக சொல்லி வைக்கின்றோம்.

எனவே, நாடாளுமன்றுக்குள் தப்பித் தவறி வந்துள்ள இந்த ஆசாமியின் நாகரீகமற்ற, மனிதாபிமானமற்ற, கருணையற்ற, சட்டத்துக்கு முரணான பேச்சுகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு திரள வேண்டும். அதுவே, நாம் நன்மையின் பக்கம் நிற்கிறோம் என்பதற்கு சாட்சியாக அமையும்.

அர்ச்சுனா எம்பியின் சர்ச்சைக்குரிய உரை உள்ளே ; https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/1049896500300932

Related posts

வன்னி பொதுஜன பெரமூன வேட்பாளர் இதுவரை 8பேர் கையொப்பம்! அடுத்த வேட்பாளர் யார்?

wpengine

வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்திசெய்ய 5000 மில்லியன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Maash

ஜனாதிபதி அனுரவின் 3 நாடுகளின் பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாய் சாத்தியமா ?

Maash