பிரதான செய்திகள்

மன்னார்- அருவியாற்றில் சட்டவிரோத மண் அகழ்வும் கடற்படையினர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும் 500 மீட்டர் தூரமான அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்டவிரோதமான முறையில்  கடற்படையினர் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகள்  அகழ்வதாக பிரதேச மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

அருவியாற்று பகுதியினை அண்டியதாக  பல குடியீருப்புகள் கடந்ந வருடம் பெய்த ஆற்று வெள்ளத்தில் பல விடுகள் சொத்துக்கள் நீரில் முழ்கி உள்ளது. எனவும்,இப்படியான சட்டவிரோத மண் அழ்வினால் நானாட்டான் மற்றும் முசலி பிரதேசங்களிள் உள்ள   குடியீருப்புகள் நீரில் மூழ்கும் ஆபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாலத்தை பாதுகாக்க அருகில் கடற்படை முகாம் அமைக்கபெற்றுள்ள போதும்,அதில் பாதுகாப்பு கடமையில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் குழுவினர்கள் தான் இப்படியான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.எனவும் தெரிவித்தனர்.

இதே போன்று நானாட்டான் மற்றும் முசலி பகுதிகளில் சட்டவிரோதமான மண் அகழ்வுகள் தொடராக இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்ற போது இதனை தடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts

மட்டக்களப்பு பிரதேச செயலக ஊழியர்களுக்கிடையிலான கலாச்சார போட்டி

wpengine

சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால் சுட்டுக்கொலை செய்கின்றனர்.

wpengine

கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் நான் தான்

wpengine