பிரதான செய்திகள்

“அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” -மஹிந்த

அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசுக்குள் இருந்து விமர்சிக்கும் நபர்கள் அரசில் இருந்து வெளியேறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் நேற்று தெரிவித்தார்.

“அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசாக எடுக்கும் தீர்மானங்கள் சகலரையும் சார்ந்ததாகும். அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசை விமர்சிக்கும் ஜனநாயக உரிமை சகலருக்கும் இருக்கின்றது.

எனினும், ஆட்சியாளர்கள் அல்லது ஆளும் கட்சிக்குள் உள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரசை மோசமாக விமர்சித்து நெருக்கடிகளை ஏற்படுத்துவதானது, ஆட்சியைக் கொண்டு செல்லக் கடினமானதாக அமையும்.

அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவர்கள் வெளியில் சென்று தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க முடியும்” – என்றார்.

Related posts

இதுவரை ஐந்து லச்சத்து 37ஆயிரம் ரோஹிங்கியர் வெளியேற்றம்.

wpengine

ஹக்கீமும் ரிஷாத்தும் புத்தளத்தில் இணைகிறார்கள்.

wpengine

அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குப் புதிய விவாகப்பதிவாளர் நியமனம்.

wpengine