பிரதான செய்திகள்

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்துள்ளது

அரசியல்வாதிகள் மீது தற்போது மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் நாடு தற்போது சிறந்த மட்டத்தில் இல்லை எனவும் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த சுமங்க தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் எந்த பேதங்களும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று மல்வத்து மகா விகாரைக்கு சென்று மநாயக்க தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சாதாரண மக்களுக்காகவே பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார்.

அந்த கட்சியை பாதுகாக்க வேண்டியது கட்சியில் உள்ள அனைவரதும் கடமை. கட்சியை வலுப்படுத்த பிரிந்து சென்றுள்ள அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.

கட்சியின் தற்போதைய செயலாளருக்கு இந்தப் பணியை செய்வது சவாலாக இருக்கும். கட்சியில் இருந்து சென்று புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்களா என்பது சந்தேகத்திற்குரியது எனவும் மாநாயக்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒலிம்பிக்கில் எமது நாடு பதக்கம் பெறவில்லை. விளையாட்டுத்துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன ? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்.

wpengine

வில்பத்து வர்த்தமானி! முஸ்லிம்கள் அதீத வெறுப்புக்கொண்டுள்ளனர்-றோகித அபே குணவர்த்தன

wpengine

ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை

Maash