பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளை தோற்கடிக்க பௌத்த பிக்குகள் முன்வருவார்கள்

நாட்டுக்கு பாதகமாக செயற்படும் அரசியல்வாதிகளை தோற்கடிப்பதற்கு பௌத்த பிக்குகள் முன்நிற்பார்கள் என தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய வளங்களை விற்பனை செய்து நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஊர் பாடசாலைகளுக்கு மக்களை வரவழைத்து நாட்டுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுப்பார்கள்.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine

டீசல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது.

Maash

நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட 112 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்!

wpengine