பிரதான செய்திகள்

அரசியல் செல்வாக்கில் 10 வருடத்திற்கு மேல் அரச உத்தியோகத்தர்கள் வவுனியாவில்

வவுனியா மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலருக்கும் அரச சுற்றுநிரூபத்திற்கு அமைவாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடமாற்றம் கிடைத்துள்ள உத்தியோகத்தர்கள் பலரும் இடமாற்றத்தை ஏற்று வேறு இடங்களுக்கு செல்லாது தமது அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்தும் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்ற முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பூராகவும் அரச உத்தியோகத்தர்களுக்கு அரச பொதுக்கொள்கை அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் பலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிளிநொச்சி இராமநாதபுரம் பழைய கண்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்

wpengine

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்! -சுஐப்.எம்.காசிம்-

Editor

அம்பாரையில் கட்டுப்பணம் செலுத்தியது அமைச்சர் றிஷாட்,ஹசன் கூட்டணி

wpengine