பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘அரசியலமைப்பு வரைபில் பௌத்த மதத்திற்கு அதிக முன்னுரிமை’ – சுதந்திர கட்சி!

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது.

புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று மாலை கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் பிரதித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

மேலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சரத்துக்களை வலுப்படுத்தும் திட்டத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் மனுக்களை தாக்கல் செய்யவும், அவர்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் விதமாக உயர் நீதிமன்றத்திடம் இருந்த அதிகாரத்தை மாவட்ட மேல் நீதிமன்றங்களுக்கு வழங்குவது குறித்தும் பரிந்துரைத்ததாக நிமல் சிரிபால டி சில்வா கூறினார்.

அத்தோடு மாகாண சபை முறையை வலுப்படுத்துவது குறித்தும் முன்னுரிமை வாக்களிப்பு முறையை இரத்து செய்யவும் தேர்தல்களில் 25% பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்! அமைச்சர் றிசாத்.

wpengine

தமிழன் என்ற உணர்வினால் மாத்திரம் எமது தேவைகளை நிறைவேற்ற முடியாது.

wpengine

துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கொள்ளை – மூவர் கைது!

Editor