பிரதான செய்திகள்

அரசாங்கம் ஒன்றும் நிறைவேற்றாமையினால் மக்கள் தற்போது வெறுப்படைந்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உரிய முறையில் ஒன்றும் நிறைவேற்றாமையினால் மக்கள் தற்போது வெறுப்படைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாரிய பின்னடைவை கண்டுள்ள சுதந்திர கட்சியை வலுப்படுத்தினால் மீள எழுவது கடினமான விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Rishad’s wife writes to the President

wpengine

திருகோணமலை மாட்டிறைச்சிக்கடையில் வெள்ளை நிறத்தில் புளுக்கள்

wpengine

நிர்க்கதியாகி நிற்கும் மக்களுக்கே! மீள்குடியேற்ற செயலணி வெள்ளிமலை கிராமத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine