பிரதான செய்திகள்

அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

எந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிற்கு செல்ல தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிடம் வாக்கு மூலம் அளிக்க தயார்.

வாக்கு மூலமொன்றை அளிக்க தினமொன்றை ஒதுக்கித் தருமாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய நான் இன்னும் நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை.
காலத்திற்கு காலம் அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னிடம் விசாரணை நடத்தப்படும் என்பதனை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு துஆ பிராத்தினை

wpengine

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

wpengine