பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு தெரிந்தும் ஏன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயருக்கு தெரிவிக்கவில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக ஆட்சியில் இருக்கும் அரசாங்கமே அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. இதன்போது உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது.

அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம்.

கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகளை சிறையில் அடைத்து, அவர்களிடம் அவ்வப்போது விசாரணைகளை நடத்தி அதிகாரிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

நாட்டின் தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான நாட்டிற்குள் செயற்படுகிறது.

நாட்டுக்கு தேவையான வகையில் நாடு ஆளப்பட வேண்டும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்தில் உள்ள எவரும் வழிபாடுகளில் ஈடுபட தேவாலயங்களுக்கு செல்லவில்லை.

இதன் மூலம் அவர்கள் இந்த தாக்குதல் குறித்து அறிந்திருந்தனர் என்பது தெளிவாகியது.

அரசாங்கத்தினர் தாக்குதல்கள் தொடர்பாக முன்பாக அறிந்திருந்தால், குறைந்தது அது பற்றி கத்தோலிக்க திருச்சபையின் பேராயருக்கு அறிவித்திருக்கலாம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுபல சேனாவின் பின்ணணியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்,வீடுகளை சோதனையிட சூழ்ச்சி வட்­டரக்

wpengine

தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான ஐந்து வருட மூலோபாய திட்டமிடல்

wpengine

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

wpengine