அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை என்பன வழிவகுப்பதாக சுட்டிகாட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றில் திறமையான பணியாளர்கள் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் திறமையற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றில் 4200 பேருக்கு பதிலாக, அங்குள்ள 500 பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும்.
இதேவேளை, மின்சார சபையில் உள்ள 26,000 பணியாளர்களிற்கு பதிலாக அதிலுள்ள அரைவாசி பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திறமையற்ற உறுப்பினர்களால் தொழிற்சங்கங்கள் வளர்கின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
