பிரதான செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

5 வருடங்கள் நிறைவடையும் வரை அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

அதிகரித்த பத்தாயிரம் ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் 2500 ரூபாய் என்ற கணக்கில் 4 வருடங்களுக்கு இணைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் சம்பள அதிகரிப்பு குறித்து பேச வேண்டாம் என அரசாங்கத்தின் பிரபலங்கள் அறிவித்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் அரசாங்கம் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக பாரியளவில் வரி அறவிட்டு வருகின்றது. வரி காரணமாக அரசாங்கத்தில் குறைந்த சம்பளத்தை பெறுபவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

2015 இல் அதிகரிக்கப்பட்ட 10000 ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் வாழ்வதற்கு போதுமானதாக இல்லை என அரசாங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள தொலைபேசி உட்பட அனைத்திற்குமான கட்டணங்கள் காரணமாக அரசாங்க ஊழியர்கள் மிகவும் கடினமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எந்த காலத்திலும் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது!- ஜனாதிபதி

wpengine

வன்னி மாவட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தைகொண்டு வந்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டேன் -றிஷாட்

wpengine

ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் மீது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

wpengine