பிரதான செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு இன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை

பத்தரமுல்ல பிரதேசத்தில் அரசாங்க அலுவலகங்களில் நேரமாற்றத்தை மேற்கொள்வதற்கான திட்டம் இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ஊழியர்களுக்கு காலை 7.30 முதல் 9.15 வரை உள்ள காலப்பகுதிக்குள் எந்நேரத்திலும் சேவைக்கு சமூகமளிக்க முடியும்.

இந்த நேர இடைவேளையில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள் வருகை தந்த நேரத்திலிருந்து எட்டு மணி நேர வேலையின் பின்னர், பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.
நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்களின் சேவைக்கு தடை ஏற்படாத வகையில் புதிய அலுவலக நேரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனத் தலைமை அதிகாரிகளால் முடியும் என்று அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறை குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி வியானி குணதிலக மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்ஹ ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இடம்பெறும் என்பதனால் தமது நிறுவனங்களின் அலுவலக நேரம் அதற்கமைவாக மாற்றப்படுமென்று தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

Related posts

கனேவல்பொல கிராமத்தின் இப்தார் நிகழ்வு

wpengine

அரசியலமைப்பு மாற்றம் இவ்வரசுக்கு ஆப்பாகுமா?

wpengine

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

wpengine