பிரதான செய்திகள்

அரச வேலை நேர மாற்றம்

அரசாங்க பணியாளர்களின் அலுவலக நேரங்களில் மாற்றம் செய்யப்பபடவுள்ளது.

பத்தரமுல்ல பிரதேசத்தில் செயற்படும் அரசாங்க நிறுவனங்களின் அலுவலக நேரங்கள் மாற்றப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை 7.15 மணி முதல் மாலை 3.15 வரை என்ற காலப்பகுதிக்கு நேரம் மாற்றப்படவுள்ளதாக அமைச்சு நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

“இது ஒரு பைலட் திட்டமாகும், இது பெருநகர அமைப்பினால் முன்னெடுக்கப்படும் முன்னுரிமை பஸ் பாதைத் திட்டத்துடன் கைகோர்த்து செயற்படுவதாக” ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நேர மாற்றுத் திட்டம் ஊழியர்களின் பணி நேரத்திற்குள் உட்பட்டதாக இருக்கும். இது தொடர்பில் அந்தந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள் முடிவு செய்ய முடியும்.

காலை 9. 15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை கட்டாய வேலை நேரங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அலுவலகம் செல்லும் ஊழியர்கள் அதிகளவான நேரத்தில் வாகன நெரிசல் காரணமாக வீதிகளில் செலவிட வேண்டியுள்ளது. அவ்வாறான அசௌகரியங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் பிரதி பணிப்பாளர் பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

முஸ்லிம்களை ஏமாற்றுவதனால் தனது புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம்.

wpengine

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு! தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

wpengine