செய்திகள்பிரதான செய்திகள்

அரச நியமனங்கள் கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில்.

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (07) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் ‘அரச நியமனத்தினை உறுதிப்படுத்து’, ‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே’, ‘அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும்’.

‘மாவட்டத்தில் இது வரையில் 2,000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ எனவும் ‘பல்வேறு கனவுகளுடன் பல கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ள போதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை’ போன்ற பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர்

அதனை தொடர்ந்து அங்கிருந்து பழைய கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

Related posts

சிறந்த கல்வி முறைமையை கட்டமைக்க அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும். -ஜனாதிபதி-

Editor

தமிழ் பிரதேசங்களுக்கு வந்து, கதைப்பதற்கு அமீர் அலிக்கு அருகதை கிடையாது – சீ.யோகேஸ்வரன்

wpengine

சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் – நிமல்

wpengine