பிரதான செய்திகள்

அரச ,தனியார் அலுவலகங்களில் குறைந்த ஆளணியுடன் செயற்பாடுகளுக்கு அனுமதி

நாட்டில் கொவிட் அனர்த்த எச்சரிக்கை நிலைக்கு மத்தியில் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள இந்த வழகாட்டல் அறிவித்தலில்,

அத்தியாவசிய சேவைகள் தவிர ஒரு வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு இருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பஸ் மற்றும் ரயில்களின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகள் ஏற்றப்பட வேண்டும். மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இரண்டு பேர் மாத்திரம் பயணிக்க முடியும். அரச மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்களில் குறைந்த ஆளணியுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவதாயின், அந்த மண்டபங்களின் ஆசன எண்ணிக்கையில் 50 வீதத்திற்கு மாத்திரம் நபர்களை அனுமதிக்க முடியும். தொழில்களில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டுமென புதிய சுகாதார வழிகாட்டலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களில் சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாகும். பாடசாலை மற்றும் முன்பள்ளிகளில் 50 வீத மாணவர்களை அனுமதிக்க முடியும். பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்கில் 25 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் என்று புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

wpengine

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

wpengine

முசலி பிரதேசத்தின் பழமையான “மஞ்சக்குளத்து” பள்ளிவாசல் பகுதி புணர்நிர்மானம் செய்யப்படுமா?

wpengine