பிரதான செய்திகள்

அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளது. இதுவொரு பொருத்தற்ற தீர்மானம். இதனை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார். 

சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தற்போதைய அரசாங்கம் கைது செய்து வருவதுபோல அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Related posts

சமுர்த்தி பயணாளிகளுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

Editor

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

Editor

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

wpengine