பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும்.

இந்த அதிகாரிகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 7100 அரசத்துறை மற்றும் அரை அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் சம்பளம் இல்லாத விடுமுறையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash

வவுனியாவுக்கு சென்ற விளையாட்டு குழுவினர்

wpengine

துமிந்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பந்துல

wpengine