பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் 2018ம் ஆண்டுக்கான அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் நியதிச் சபைகளின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பான ஆலோசனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சின் நிறுவன பணிப்பாளர் நாயகம் W.D.சோமதாஸ தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான வர்த்தமான அறிவித்தல் அரச முகாமைத்துவ திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் இந்த சம்பள அதிகரிப்பான பத்தாயிரம் ரூபாவின் மூன்றாவது பகுதி மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

2020ம் ஆண்டளவில் அடிப்படை சம்பளத்தின் பத்தாயிரம் ரூபாவின் அதிகரிப்பு முழுமையாக பூர்த்தியடையும். அத்துடன் மேலும் 20 வீத கொடுப்பனவு அரச ஊழியர்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் நியதிச் சபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் திரு.சோமதாஸ மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷ

wpengine

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களே !

wpengine

மன்னாரில் வறட்சி! 32 ஆயிரத்து 548 குடும்பங்கள் பாதிப்பு

wpengine