பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தியினை வெளிப்படுத்திய அமைச்சர்

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் உயர்த்தப்படும்.

இதன்படி, அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும்.
சட்ட மா அதிபரின் சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரையில் உயர்த்தப்படும்.

மருத்துவர்களின் அடிப்படைச் சம்பளம் 60000 ரூபாவிலிருந்து 69756 ரூபாவாக உயர்த்தப்படும்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஆண்டொன்றுக்கு 12 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine

சாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா?

wpengine

Youtube போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் Facebook

wpengine