பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் வேலை நேரம் 6மணி பிமல் ரத்நாயக்க (பா.உ)

தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய  தினம்(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது மனித உழைப்பின் நேரம் குறைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கையில் மாத்திரம் மனித உழைப்பின் நேரம் மென்மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்பது மணிநேரம் வரை பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

அரச ஊழியர்களுக்கு அவ்வாறான நிலை இல்லை என்ற போதும் போக்குவரத்தில் அவர்களும் கணிசமான நேரம் செலவிட வேண்டியுள்ளது.

இதற்குப் பதிலாக ஊழியர்களின் கடமை நேரத்தை 08 மணி நேரத்தில் இருந்து ஆறு மணிநேரமாக குறைக்க வேண்டும். மேலும் உழைப்புக்கேற்ப ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine

முகவர்கள் களமிறக்கப்பட்டு சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி’ – முசலியில் ரிஷாட்

wpengine

துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பந்துல கோரிக்கை!

wpengine