பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச ஊழியர்களிடம் கடன் தவணைகள் மற்றும் கடன் வட்டியை அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.


எனினும் இந்த மாதம் முதல் மாத சம்பளத்தில் மீண்டும் அறவிடப்படும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கான சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு கடன் மற்றும் தவணைகளுக்காக அவர்களின் சம்பளத்தில் அறவிட வேண்டிய பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.


அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ள சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கில் பலமடையும் முஸ்லிம் கூட்டமைப்பு: ஓட்டம் பிடிப்பாரா ஹக்கீம்?

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine

எமது அனுமதியின்றி கிழக்கு மாகாண சபையைக் கலைக்க முடியாது

wpengine