பிரதான செய்திகள்

அம்பாறை,கண்டி தாக்குதல் ஈராக்கிடம் முறையிட்ட ஹரீஸ்

கண்டி, அம்பாறை வன்முறைகள் தொடர்பில், இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் அகமட் ஹமீட் அல் ஜுமைலிடம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.ஹரீஸ் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் அகமட் ஹமீட் அல் ஜுமைல் விளையாட்டுத்துறை அமைச்சின் அலுவலகத்தில் இன்றைய தினம் பிரதி அமைச்சர் ஹரீஸை சந்தித்து இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான நட்புறவு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே பிரதி அமைச்சர் கண்டி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஈராக் தூதுவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அசாதாரண சூழ்நிலையின்போது, பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டமை, அவற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை என்பன தொடர்பிலும் அவர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

ஆப்கானிஸ் தான் நாட்டின் உயர் விருது “காஸி அமானுல்லா கான்“ மோடிக்கு

wpengine

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine