பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

(அஷ்ரப் ஏ சமத்)

அம்பாறை மாவட்டத்தின் உள்ள  உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிட்டு  வெற்றி பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா்கள் இன்று(24) ஸ்ரீ.ல.மு.காங்கிரசின்தலைமையகமான தாருஸ்ஸலாமில்  கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.   இவற்றில் தமிழ் முஸ்லீம் 12 பெண் உறுப்பிணா்களும் அடங்குகின்றனா்.அத்துடன் தெஹியத்தக் கண்டிய, பதியத்தலாவை, போன்ற சபைகளில் வெற்றிபெற்ற பெரும்பாண்மையினத்தினைச் சோ்ந்த 8  உறுப்பிணா்களும்  அடங்குகின்றனா்.

  இந் நிகழ்வில் பிரதியமைச்சா்களான பைசால் காசீம், எச்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்களான எம்.எம். மன்சூர்,ஏ.எல். நசீா் கட்சியின் செயலாளா் நிசாம் காரியப்பர் உட்பட கடச்சியின் உயா் பீட உறுப்பிணா்களும் கலந்து  கொண்டனா்.

Related posts

ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் புரிய வேண்டும்

wpengine

சமூகவலைத்தள செயற்பாட்டாளரை மூடக்க நடவடிக்கை

wpengine

பாராளுமன்றத்தில் சஜித்தின் கோரிக்கைக்கு ஆதரவு! மஹிந்தவின் ஆதரவு குழு

wpengine