பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

(பிறவ்ஸ்)
வேலையில்லா பட்டதாரிகளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடாத்தி, தற்போது அதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காரைதீவில் 6 நாட்களாக சத்தியாகக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை நேற்று சனிக்கிழமை (04) அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திறைசேரி அனுமதி கிடைக்காத நிலையில், அவற்றை நிரப்புவதற்காக பிரதமரை சந்தித்து பேசுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர் பிரதமரை சந்தித்தபின்னர் அதனை கவனத்திற்கொள்வதாக பிரதமர் வாக்குறுதியளித்தார்.
அதன்பின்னர் மறுநாள், இதற்காக திறைசேரி மற்றும் பிரதமர் அலுவலர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உடனடியாக நிரப்பக்கூடிய வெற்றிடங்கள் குறித்து தன்னிடம் சிபார்சு செய்யுமாறு இக்குழுவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்தக்குழுவின் அறிக்கையின் பின்னர், அதற்குள்ள வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான முற்சிகளை மேற்கொள்வோம் என்று ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

Related posts

றிசாட் பதியுதீன் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கொய்யாவாடி மக்கள்

wpengine

உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

wpengine

அகதிகள் படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பது தொடர்பில் யாப்பா – அமைச்சர் றிசாத் பேச்சு

wpengine