பிரதான செய்திகள்

அம்பாறை ஆட்சியமைப்பதில் றிஷாட்டிடம் தோற்றுப்போன ஹக்கீம்

( ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸ் அவர்களை நான் தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’ என பதிலளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அம்பாறை மாவட்டத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இறக்காம், பொத்துவில் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிசாளர்களாகவும் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த இருவர் பிரதித் தவிசாளர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் பதவிகளை ஏற்பதுடன் உப தவிசாளர்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இருவர் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபை தொடர்பில் இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது!

Related posts

உலகம் முழுவதிலும் இருந்து மக்கா நகருக்கு செல்லும் புனித ஹஜ் பயணம் தொடங்கியது.

wpengine

மறைந்திருந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது நல்லாட்சியின் அதிசயம் -இக்பால் நப்ஹான் விசனம்

wpengine

திட்டமின்றி பணத்தை அச்சிடுவதை வயிற்று போக்கை மேலும் அதிகரிக்கும் செயல்

wpengine