பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் கறுப்புக்கொடி

(பி.எம்.சம்சுதீன்)
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்வதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பிரதேசத்தில் பல இடங்களிலும் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன்போ ஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே
அமைச்சர் ஹக்கீம் இன்று பிற்பகல் இங்கு வருகை தரவுள்ளார்.

கடந்த காலங்களில் இதற்காக பல கோடி ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன்
இம்முறை 16 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது மு.கா. அரசியல்வாதிகள்
பகற்கொள்ளையடிப்பதற்காக செய்யப்படும் ஏமாற்று வேலை என குற்றம் சாட்டப்படுகிறது.

இதனைக் கண்டித்தே அமைச்சர் ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்புத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதி, பெரிய பள்ளிவாசல், உல் வீதிகள் உட்பட பல இடங்களிலும்
கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.unnamed-4

இன்று மீண்டும் திறக்கப்பட விருந்த தோணா அபிவிருத்திக்கான பெயர்ப்பலகையும்
சேதப்படுத்தப்பட்டுள்ளது.unnamed-3

Related posts

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

wpengine

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை. வவுனியாவில் தொடர்ந்தும் தாமதம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் 3 சபைகளிலும் இன்று ரிசாட் தலைமையிலான ஆதிக்கம்..!

Maash