பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமீன் கவனத்திற்கு! மன்னார் நகரில் பாதிப்படைந்த குடிநீர் திட்டம்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் நகர பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கியில் திருத்தவேலை நடைபெறுவதனால்  நீர் விநியோகம் தடைபெற்று விட்டதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எழுத்தூர் மற்றும் பள்ளிமுனை நீர்த்தாங்கிகளிலிருந்து மாத்திரம் மேற்கொள்வதன் காரணமாக 17.02.2017 தொடக்கம் 25.02.2017 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் பாய்ச்சல் வேகம் மன்னார் நகரப்பகுதியில் குறைவாக காணப்படும் என்பதனை பாவனையார்களுக்கு அறிவிக்கப்படுகின்றதுடன்.

இதனால் முற்றாக பாதிக்கப்படும் பாவனையாளர்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொலன்னாவ குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உணவு பொதிகள் வினியோகம்

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

wpengine