பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை ஒழிக்க டயஸ்போரவுடன், சில முஸ்லிம் அரசியல்வாதிகள்

(மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்)

அகில இலங்கை மக்கள் காங்கிர‌ஸ் கட்சியின்  த‌லைவ‌ரும் அமைச்ச‌ருமான றிசாத் ப‌தியுதீனை எப்ப‌டியாவ‌து ஒழித்துக்க‌ட்ட‌ வேண்டும் என்ற‌ ட‌ய‌ஸ்போராவின் வேட்கைக்கு சில‌ முஸ்லிம் அரசிய‌ல்வாதிக‌ள் ப‌லியாகியுள்ளார்க‌ள்.

ஒரு ப‌க்க‌ம் த‌மிழ் இன‌வாதிக‌ள் இன்னொரு ப‌க்க‌ம் சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் ம‌ற்றுமொரு ப‌க்க‌ம் அர‌சின் துரோக‌ங்க‌ள் என‌ ப‌ல்முனை தாக்குத‌ல்க‌ளுக்கு அமைச்ச‌ர் ரிசாத் முக‌ம் கொடுப்ப‌தை பார்க்கும் போது நான் பெரிதும் அச்ச‌ப்ப‌டுகிறேன்.

அவ‌ர் த‌ன‌து ம‌க்ஜ‌ளுக்கும் ஏனைய‌ பிர‌தேச‌ ம‌க்க‌‌ளுக்கும் த‌ன்னாலான‌ சேவைக‌ளை செய்ய‌வேண்டும் என‌ துடிப்பாக‌ செய‌ற்ப‌டுகிறார். அவ‌ர் நினைத்தால் த‌ன‌து அமைச்சை அர‌சுக்கு ம‌ட்டும் சேவை செய்வ‌தாக‌ காட்டிக்கொண்டு காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ஏனைய‌ அமைச்ச‌ர்க‌ள் போல் நிம்ம‌தியாக‌ இருக்க‌லாம். அவ்வாறில்லாம‌ல் ப‌ல‌ சேவைகளை த‌லைமேல் அள்ளிப்போட்டுக்கொண்டு அர‌சிய‌லில் ச‌மூக‌த்தின் விடி வெள்ளியாய் செய‌ற்ப‌டும் ஒரு ம‌னித‌னை அழிக்க‌த்துடிக்கிறார்க‌ள்.

இந்த‌ நிலையில் இல‌ங்கை முஸ்லிம் ச‌மூக‌ம் ஒன்று பட்டு அமைச்ச‌ர் ரிசாதுக்கு ஆட்க‌ர‌வாக‌ நிற்ப‌தும் அவ‌ருக்காக‌ துஆ செய்வ‌தும் இன்றைய‌ சூழ் நிலையில் ச‌மூக‌த்தின் க‌ட‌மையாகும்.

Related posts

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine

மோசமான மோசடிகள் மாநகர சபைக்குள் ,உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

wpengine

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

wpengine